Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க'வில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கத்துக்கு காங்கிரஸ் தான் காரணமா?

தி.மு.கவில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கத்துக்கு காங்கிரஸ் தான் காரணமா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2022 9:09 AM IST

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கே.எஸ் ராதாகிருஷ்ணன் அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. கட்சி பணிகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வருகிறார். ஆனால் சமூக வலைத்தளங்களில் கருத்தை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவி குறித்த வரலாற்று நிகழ்வுகளை கே.எஸ் ராதாகிருஷ்ணன் வார இதழ் பத்திரிகைக்கு கட்டுரையாக எழுதி இருந்தார்.

அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற சிலர் தொடர்ந்து தலைமைப் பதவியை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. அரசியலில் வெற்றிபெறுவதற்கு உழைப்பு,நேர்மை மட்டுமல்ல.

அதைத் தாண்டி சில அக, புற காரணிகள் இருக்கின்றன என்பதையே எனது 52 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் சொல்கிறது என்று கூறி இருந்தார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் நிலையில் இந்த கருத்து வெளியானதால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.

Input From: PT

Next Story
கதிர் தொகுப்பு
Trending News