Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பணியிடத்தை நிரப்ப லஞ்சம் கேட்கும் குளச்சல் காங்கிரஸ் எம்.எல்.ஏ - தீயாக பரவும் ஆடியோ

அரசு பணியிடங்களை நிரப்ப காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் பேரம் பேசுவதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் இது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அரசு பணியிடத்தை நிரப்ப லஞ்சம் கேட்கும் குளச்சல் காங்கிரஸ் எம்.எல்.ஏ - தீயாக பரவும் ஆடியோ

Mohan RajBy : Mohan Raj

  |  9 Oct 2022 9:19 AM GMT

அரசு பணியிடங்களை நிரப்ப காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் பேரம் பேசுவதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் இது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குறந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஐந்து அரசு பணியிடங்களில் ஆட்கள் நிரப்ப குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேடி உதயம் ஆகியோர் பணம் பேரம் பேசுவதாக தாக்கோட்டுத்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் எம்.எல்.ஏ உள்ளிட்ட இரண்டு பேரும் பேரம் பேசுவது பெரும் கேவலமாக இருக்கிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஜெரால்ட் கென்னடி தெரிவிப்பது போல் உள்ளது. இது குறித்து எம்.எல்.ஏ பிரின்ஸ், கேடி உதயத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அடிப்படை ஆதாரம் இன்றி கென்னடி பேசுவதாக ஆடியோ வெளியிட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News