Kathir News
Begin typing your search above and press return to search.

அவர்களுக்கே உரித்தான நில அபகரிப்பு வழக்கு! தி.மு.க-வை அச்சத்தில் உறைய வைத்த சிபிசிஐடி!

அவர்களுக்கே உரித்தான நில அபகரிப்பு வழக்கு! தி.மு.க-வை அச்சத்தில் உறைய வைத்த சிபிசிஐடி!

அவர்களுக்கே உரித்தான நில அபகரிப்பு வழக்கு! தி.மு.க-வை அச்சத்தில் உறைய வைத்த சிபிசிஐடி!

Muruganandham MBy : Muruganandham M

  |  30 Dec 2020 6:57 AM GMT

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோல் தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாக ஜெகத்ரட்ச்கன் மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யாக வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் திமுக மேலிட சகவாசத்தின் பேரில் திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனவர். திமுக – காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபராக உருவாகிய அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.

கடந்த 1995 ஆம் ஆண்டில் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த ஜெகத்ரட்சகன், 1.5 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளை மீறி 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, நில அபகரிப்பு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெகத்ரட்சகன் மீது புகார் அளித்த குவிட்டன்தாசன் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை சம்ர்ப்பித்தார்.

அதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை சிபிசிஐடியினர் தயார் செய்து வருகின்றனர். ஜனவரி 5 ஆம் தேதி வரை கைது நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கையில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்த விவகாரத்தில் ஜெகத்ரட்சகன் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News