தலைவர் பாணியில் தருமபுரி தி.மு.க., எம்.பி.யின் தமிழ்.. நெட்டிசன்கள் கிண்டல்.!
தலைவர் பாணியில் தருமபுரி தி.மு.க., எம்.பி.யின் தமிழ்.. நெட்டிசன்கள் கிண்டல்.!
By : Kathir Webdesk
தருமபுரி திமுக எம்.பி., செந்தில்குமார் டெல்லியில் ரயில்வேத்துறை அதிகாரிகளை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதனை அவர் முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அவரது தமிழை பார்த்து நெட்டிசன்கள் மிகவும் கிண்டல் செய்து வருகின்றனர். அதாவது டெல்லியில் இரயில்வே துரை (துறை) சேர்மேன் சிஇஓ அவர்களை சந்தித்து, மொரப்பூர் தருமபுரி ரயில் பாதை பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அமைச்சர் பியூஷ்கோயல் 4.3.2019 அன்று அடிக்கல் நாட்டி 358 கோடி ஒதுக்கியிருந்தார்.
தர்மபுரி சார்ந்த மேலும் 28 கோரிக்கைகள் முன்வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ரயில்வேத்துறைக்கு துரை என்று எழுதியுள்ளார். அவரது கட்சியை சேர்ந்த தலைவர் ஸ்டாலினுக்குத்தான் தமிழ் வராது என்றால் கட்சியில் இருக்கின்ற அத்தனை பேருக்கும் இதே கதிதான் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.