சட்டப்பேரவை தேர்தல்.. பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைப்பு.!
சட்டப்பேரவை தேர்தல்.. பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைப்பு.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தற்போது இருந்தே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளது. அதிமுக சார்பில் இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அதே போன்று திமுக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. 100 நாள் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கி விட்டனர். இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் 2021ம் ஆண்டு நடக்கவுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை, சசிகலா புஷ்பா, கனகசபாபதி, ராமஸ்ரீநிவாசன், கார்வேந்தன், நாகராஜ், எஸ்.எஸ்.ஷா மற்றும் நாச்சிமுத்து ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.