சட்டப்பேரவை தேர்தல் பணி.. அதிமுக இன்று அவசர ஆலோசனை.!
சட்டப்பேரவை தேர்தல் பணி.. அதிமுக இன்று அவசர ஆலோசனை.!
By : Kathir Webdesk
தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகள் குறித்து அதிமுக தலைமை இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் தற்பொழுது இருந்தே பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நடிகர் ரஜினி இந்த மாதம் 31ம் தேதி தனது கட்சியை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். அவரது அறிவிப்பு தமிழக அரசியல் பயணம் தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் 4.30 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை நடத்துகின்றனர்.
இதற்கு முன்பாக கடந்த மாதம் நடந்த கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்ட முழு விவரங்களுடன் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படாலம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி, மற்றும் என்ன மாதிரியான வியூகங்கள் வகுக்க வேண்டும் என்பன பற்றிய முடிவுகள் விவாதிக்கப்படலாம்.