Kathir News
Begin typing your search above and press return to search.

வரட்டும்! வரட்டும்! என காத்து கொண்டிருந்த கோவை பா.ஜ.க மகளிர் அணியினர் - கோவைக்கு வரும் திட்டத்தை சத்தமில்லாமல் ஒத்தி வைத்த ஆண்டிமுத்து ராசா

ஆண்டிமுத்து ராசா வந்தால் கண்டன போராட்டம் நடத்துவோம் என கோவை பா.ஜ.க மகளிர் அணியினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரட்டும்! வரட்டும்! என காத்து கொண்டிருந்த கோவை பா.ஜ.க மகளிர் அணியினர் - கோவைக்கு வரும் திட்டத்தை சத்தமில்லாமல் ஒத்தி வைத்த ஆண்டிமுத்து ராசா
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 Sept 2022 9:50 AM IST

ஆண்டிமுத்து ராசா வந்தால் கண்டன போராட்டம் நடத்துவோம் என கோவை பா.ஜ.க மகளிர் அணியினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்துக்கள் குறித்து இழிவாக பேசிய ஆண்டிமுத்து ராசாவிற்கு தமிழக முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன, போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. எம்.பி ஆண்டிமுத்து ராசா நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து ரோடு வழியாக நீலகிரி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதை அறிந்த பா.ஜ.க மகளிர் அணியினர் கருப்பு கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்கு அனுமதி கேட்டு மகளிர் அணியின் மாவட்ட பொது செயலாளர் பிரித்தி லட்சுமி தலைமையில் போலீஸில் நேற்று காலை கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது பின்னர் இதுகுறித்து பா.ஜ.க மாநில மகளிர் அணியினர் கூறுகையில் பெண்களை இழிவு படுத்தி பேசிய எம்.பி ஆண்டிமுத்து ராசா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். பொது மன்னிப்பு கூட கேட்காமல் இருக்கும் ஆண்டிமுத்து ராசா வந்தால் கண்டன போராட்டம் நடத்துவோம், இந்த போராட்டம் கோவில் கோவிலாக சுற்றும் முதல்வரின் மனைவி மற்றும் மகளுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம்' என்றனர்.

கோவையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் கோவை வழியாக நீலகிரி செல்ல திட்டமிட்ட எம்.பி ஆண்டிமுத்து ராசா தவிர்க்க முடியாத காரணத்தினால் பயணத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் அவர் எப்பொழுது கோவை வந்தாலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா மகளிர் அணியினர் தெரிவித்துள்ளனர்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News