Kathir News
Begin typing your search above and press return to search.

போங்க தம்பி எங்களுக்கு பல்டி அடிக்குறது புதுசா என்ன? நாங்க அடிக்காத பல்டியா? - கொள்கை குன்று அமைச்சர் பொன்முடியின் புதிய பல்டி

'புதிய கல்வி கொள்கை! அதுல இருக்க நல்லது எடுத்துக்கலாம் தப்பு இல்லை' என அமைச்சர் பொன்முடி பேசியது

போங்க தம்பி எங்களுக்கு பல்டி அடிக்குறது புதுசா என்ன? நாங்க அடிக்காத பல்டியா? - கொள்கை குன்று அமைச்சர் பொன்முடியின் புதிய பல்டி

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 2:41 AM GMT

'புதிய கல்வி கொள்கை! அதுல இருக்க நல்லது எடுத்துக்கலாம் தப்பு இல்லை' என அமைச்சர் பொன்முடி பேசியது திமுக அரசு அடித்த பல்டி'க்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! புதிய கல்விக் கொள்கை வரவே கூடாது! புதிய கல்விக் கொள்கை வேண்டவே வேண்டாம்! புதிய கல்விக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானது! புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என தூங்கும் போது கூட புதிய கல்வி கொள்கையை எதிர்த்து பேசி வந்த திமுக அரசு தற்பொழுது புதிய கல்விக் கொள்கை வந்த சரி என அந்தர் பல்டி அடிக்கும் விதமாக பேசியது இவங்களுக்கு இதே வேலையா போச்சு என திமுகவினரே புலம்பும் அளவிற்கு மாறி உள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தாங்க, இது குறித்து தமிழ்நாட்டில் சில மாசத்துக்கு முன்னாடி புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரும்போது தமிழ்நாட்டில் இதை நாங்க அனுமதிக்க மாட்டோம் இது எங்களுடைய கலாச்சார மற்றும் எங்களுடைய மாநில உரிமைகளை பறிக்கிறதுன்னு வழக்கம் போல திமுக பேசுற கலாச்சாரம், மாநில உரிமை, திராவிடம், திராவிட நாடு என வழக்கம் போல ஊட்டெல்லாம் உருட்டி வந்தாங்க திமுகவினர்.

ஆனா திடீரென புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறது ஒன்னும் தப்பில்லன்னு பேசியது குழப்பத்தை மட்டும் இல்லைங்க திமுகவே குளம்பி போயிருக்கின்றத காமிக்குது.

மத்திய அரசு பொருத்தவரை இந்தியாவில் இன்னும் ஆங்கிலேயர் உருவாக்கிய கல்வி முறை தான் பின்பற்றப்படுது இதனால் மாணவர்கள் ஆராய்ச்சி உள்ளிட்ட துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்று சொல்லி கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் சில மாற்றங்கள் செய்து புதிய கல்விக் கொள்கை இது நம் கலாச்சாரத்தை படிக்கிற விஷயம் நடக்கும் அப்படின்னு சொல்லி கொண்டு வந்துச்சு.

இதை அந்த சமயம் திமுக எதிர்க்கும் பொது போது இது நவீன குலக்கல்வி முறை, இது வந்து நடைமுறைக்கு வரவே வரக்கூடாது அப்படி எல்லாம் சொல்லி இந்த தமிழ்நாட்டுக்கு தனியா மாநில கல்வி கொள்கை உருவாக்கனும்னு தனி குழுவையும் நியமிச்சார் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

இந்த குழு மாநிலத்தோட புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபடும், தமிழ்நாட்டுக்கென தனியாக கல்விக்கொள்கை இருக்கும், இந்த அதோட அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பிப்போம்ன்னு சொல்லி இருந்தாரு அமைச்சர் பொன்முடி.

இப்படி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக முழு நேரமாக களமாடி வந்த திமுக இப்ப மத்திய அரசுடைய புதிய கல்விக் கொள்கை குறித்து ஆதரவு கருத்தை தெரிவித்தது இவங்களுக்கு இதே வேலையா போச்சுப்பா என உடன்பிறப்புகளையே கடுப்பாக்கியிருக்கு.

சிவகங்கை மாவட்டத்தில் இருக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தோட 33வது பட்டமளிப்பு விழா பேசினார் அமைச்சர் பொன்மொழி. அப்ப விழாவில் அமைச்சர் பேசின முக்கியமான விஷயம், 'புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் நல்ல அம்சங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை நம் தமிழ்நாட்டில் கல்விக் கொள்கைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் ஆய்வு செய்து புதிய கல்வி குழுவில் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம் அனைவரும் தங்கள் தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும்' அப்டின்னு பேசியதுதான் இப்ப ஹைலைட்டே.

இது மட்டுமில்லாம, 'தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல்படி புதிய கல்வி கொள்கை உருவப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களை கொண்டதாக புதிய கல்விக் கொள்கையை உருவாக்கப்பட்டுள்ளது உலக அளவில் தமிழ்நாட்டின் சிறப்பானதாக மாறும் என சந்தேகம் இல்லை' அப்படின்னு உருட்டியிருக்காரு பாருங்க ஒரு உருட்டு அதாவது புதிய கல்விக் கொள்கையை வேண்டாம் சொல்லிட்டு இப்ப புதிய தமிழக தமிழக முதல்வர் வழிகாட்டுதல்தான் உருவாகியிருக்கு அப்படியே மாத்தி சொன்னது இதுதான் திமுக கொள்கை கோட்பாடு எல்லாம் ன்னு சொல்லாம சொலிருக்குங்க.

புதிய கல்வி கொள்கை எதிரா இருப்போம் சொல்லிட்டு அதற்க்கு எதிரா தீவிரமா கம்பு சுத்திட்டு ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் அவரோட உட்காந்து சாப்பிட்டதுக்கு அப்புறம் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் தப்பில்லை அப்டின்னு திமுக சொன்னது ஏற்கனவே பல பல பல்டி அடித்த எங்களுக்கு இந்த பல்டி புதுசில்லை அப்டின்னு சொல்ற மாதிரி இருக்குங்க.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News