எங்கள் பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்வோம்! ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!
எங்கள் பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்வோம்! ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!
By : Kathir Webdesk
1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன், தம்பி பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்வோம் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
சென்னையில் ‘அம்மா பேரவை’ சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது: யாராலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அ.தி.மு.க. உள்ளது. சாதாரண தொண்டர்கள் கூட பெருமைப்படும் இயக்கம் அ.தி.மு.க.
கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிசாமி முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் ஒரே இயக்கமாக அ.தி.மு.க. விளங்கும். தி.மு.க. ஒரு தீய சக்தி. அதனை அரசியல் களத்தில் இருந்து அகற்ற வேண்டும். ஆளும் கட்சி மக்களிடம் எந்த ஒரு கெட்ட பெயரும் இல்லை. நல்ல பெயர்தான் நீடித்து வருகிறது.
1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன், தம்பி பிரச்சனைகள் வரும். அதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். நாங்கள் வெற்றியே நோக்கி செல்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.