உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் ! ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இன்று ஆலோசனை !
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
By : Thangavelu
உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக சார்பில் இன்று முதல் மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய சூழலில் தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மாநில தேர்தல் ஆணையத்திடம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் தேர்தலுக்கான வேலைகளை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையானது சென்னையில் உள்ள ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
Source: Top News
Image Courtesy: Admk ட்விட்டர்
https://www.toptamilnews.com/local-body-elections-admk-ops-eps-consult-today/