"தமிழகத்தில் தாமரை மலராது".. பொறாமையில் பொங்கும் கனிமொழி
"தமிழகத்தில் தாமரை மலராது".. பொறாமையில் பொங்கும் கனிமொழி

தமிழகத்தில் பா.ஜ.க'வின் வளர்ச்சியை பார்த்து பலர் பிரமித்தாலும் தி.மு.க அதனை கண்டு இன்றுவரையில் வாயடைத்து நிற்கிறது. அந்த வகையில் பா.ஜ.க'வின் வளர்ச்சியில் பொறாமை பட்டு "தமிழகத்தில் தாமரை மலராது" என கனிமொழி கூறியுள்ளார்.
தி.மு.க மகளிர் அணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டார். சாயல்குடியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டம் என்ற தி.மு.க கூட்டத்தில் கனிமொழி பேசினார்.
பின் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இலங்கை கடற்படை தாக்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதும் அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. பிரதமர் மோடி இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எத்தனை முறை பா.ஜ.க தலைவர்கள் தமிழகத்துக்கு வந்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது" என பொறாமையயுடன் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தி.மு.க'வின் வளர்ச்சியை விட பா.ஜ.க வளர்ச்சி விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. எங்கே தங்கள் கட்சியான தி.மு.க'வின் அஸ்திவாரத்தை இது ஆட்டம் காண வைத்துவிடுமோ என்ற பயத்தில் கனிமொழி பேசுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.