Kathir News
Begin typing your search above and press return to search.

நிலஅபகரிப்பு புகாரில் போதிய ஆவணங்கள் இல்லை ! என மா.சுப்பிரமணியன் ஆஜராவதில் இருந்து விலக்கு !

செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிலஅபகரிப்பு புகாரில் போதிய ஆவணங்கள் இல்லை ! என மா.சுப்பிரமணியன் ஆஜராவதில் இருந்து விலக்கு !
X

Mohan RajBy : Mohan Raj

  |  12 Aug 2021 3:00 AM GMT

நிலஅபகரிப்பு புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு போதிய ஆவணங்கள் இல்லை என நீதிபதி விலக்கு அளித்துள்ளார்.

சென்னை மாநகர மேயராக மா.சுப்பிரமணியன் இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ'க்களை விசாரிக்கும் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மா.சுப்பிரமணியன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை எனவும் இதில் எந்த விதிமீறலும் இல்லை. அரசியல் ரீதியாக அளிக்கப்பட்ட புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் குற்றச்சாட்டு பதிவுக்கு மா.சுப்பிரமணியம் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை எதிர் தரப்பிற்கு வழங்க, மனுதரார் தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 3ம் தேதி ஒத்திவைத்தனர்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News