Kathir News
Begin typing your search above and press return to search.

வன்னியர்களை இழிவுபடுத்திய 'ஜெய்பீம்' சூர்யாவுக்கு மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி. ஆதரவு!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் அப்படத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மதுரை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி. வெங்கடேஷன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

வன்னியர்களை இழிவுபடுத்திய ஜெய்பீம் சூர்யாவுக்கு மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி. ஆதரவு!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Nov 2021 5:40 AM GMT

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் அப்படத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மதுரை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி. வெங்கடேஷன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் குறியீடான அக்னி சட்டியை காவலர் வீட்டில் உள்ள காலண்டரில் வைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிகள் வன்னியர்களை மிகவும் காயப்படுத்துவதாகவும், மற்ற சமூதாயத்தினரிடம் கெட்டபெயர் வந்திருப்பதாக வன்னியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


குறிப்பாக பாமக கட்சியும் சூர்யாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்களை அளித்து வருகிறது. ஒரு புறம் வன்னியர் சங்கம் சார்பில் நஷ்ட ஈடாக ரூ.5 கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இதனால் ஜெய்பீம் படக்குழுவினர் வேண்டும் என்றே வன்னியர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்காமல் காலம்தாழ்த்தி மிகப்பெரிய வன்முறையை தூண்டும் விதமாக பேட்டி அளிப்பது மற்றும் அறிக்கை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களுக்கு சில சாதி அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மதுரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான வெங்கடேஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எளிய மக்களின் குரலாய் நின்றால் எதிரிகள் அலறுவார்களென்பதே உலக நியதி... உம்மோடு நாங்கள் இருக்கிறோம்.. என்று பதிவிட்டுள்ளார். இவரது கருத்து வன்னியர்களுக்கு எதிராக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சமூதாயத்தை இழிவாக காட்சிப்படுத்தப்பட்ட படக்குழு மன்னிப்பு கேட்டுவிட்டால் வன்னியர் அமைப்பு இந்த பிரச்னையை கைவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் விடும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவு அளிப்பது வன்னியர்களை மேலும், மேலும் காயப்படுத்துவதாகவும் அவர்களை தூண்டிவிடும் விதமாகவும் அமைய வாய்ப்புள்ளது. இனிமேலாவது நடிகர் சூர்யா வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source: Twiter

Image Courtesy:Social Media


Next Story
கதிர் தொகுப்பு
Trending News