மதுரை: அம்பேத்கர் பிறந்தநாளில் கலாட்டாவில் ஈடுபட்ட வி.சி.க. கோஷ்டிகள் மீது வழக்கு.!
மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது திட்டமிட்டு வன்முறை தூண்டும் விதமாக அவர்களிடம் பேசி, அவர்களை மாலை அணியவிடாமல் விசிக கோஷ்டி செய்தது.
By : Thangavelu
நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிலையில், மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரிடம் வேண்டும் என்றே விசிக கோஷ்டிகள் தகராறு செய்தனர்.
இதனால் மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது திட்டமிட்டு வன்முறை தூண்டும் விதமாக அவர்களிடம் பேசி, அவர்களை மாலை அணியவிடாமல் விசிக கோஷ்டி செய்தது. நேற்று (ஏப்ரல் 14) மதுரை தல்லாகுளத்தில் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக, மதிமுக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, மரியாதை செய்வதற்காக அதிமுகவினரும், பாஜகவினரும் காத்திருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த விசிக கோஷ்டிகள் பாஜகவினர் மாலை அணிவிக்கக் கூடாது என்று கோஷங்கள் எழுப்பியதோடும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது.
மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மஹாசுசீந்திரன் தலைமையில் கூடியிருந்த பாஜகவினரை, விசிக ரவுடி கும்பல் கைகளில் உள்ள கொடிகளால் தாக்கினர். இதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நீங்கள் மரியாதை செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.
திட்டமிட்டு வன்முறை சம்பவங்களில் விசிக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள அனைவருமே வன்முறையை நிகழ்த்தி வருவதை காணமுடிகிறது. அதே போன்று மதுரையில் விசிக ரவுடிக்கும்பல், பாஜக மீது தாக்குதல் நடத்தியிருப்பது வெட்கக்கேடான செயல் ஆகும்.
இந்நிலையில், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட விசிக பிரமுகர் கதிரவன் உள்ளிட்ட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் அரக்கோணத்தில் திட்டமிட்டு விசிகவை சேர்ந்தவர்கள் குடிபோதையில் தகராறு செய்து, கொலை செய்யும் அளவிற்கு வன்முறையை நிகழ்த்தினர்.
இது போன்று தமிழகம் முழுவதும் விசிக கும்பல் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி வரும் சூழல் உருவாகியுள்ளது. எனவே போலீசார் இது போன்ற கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாகும்.