மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் விலகல்.. விலகியதற்கான காரணம் இதுதானாம்.!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை அடைந்தது. இதனால் அக்கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். இதனால் பலர் மனவேதனையில் இருந்து வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை அடைந்தது. இதனால் அக்கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். இதனால் பலர் மனவேதனையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் கட்சியை விட்டு விலகுவதாக அறிக்கை ஒன்றை அக்கட்சியின் தலைவருக்கு எழுதியுள்ளார்.
அதில், அன்பு நிறைந்த மக்கள் நீதி மய்யம் குடும்பத்தினருக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் ஆகிய நான் கனத்த இதயத்துடன், தெளிவான சிந்தனையுடனும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்.
இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான் இன்று எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும்.
நான் ஏன் இப்பொழுது கட்சியில் இருந்து விலகுகிறேன் என்பதற்கான விரிவான காரணத்தை உங்கள் அனைவரிடமும் இத்துடன் ஒரு விளக்க கடிதத்தை இணைத்துள்ளேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக்கவனமாக எடுத்திருக்கின்றேன். கட்சியின் இத்துணை பெரிய தோல்விக்குப்பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும், தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்த மாறுபட்டு செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை, மாறிவிடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை.
எனக்கு தெரிந்த தலைவர் திரு.கமல்ஹாசன் கொள்கைக்காகவும், எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும், அனைத்து நல்ல தலைமைப் பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துக்கின்றேன்.
தலைவர் கமல்ஹாசன் அவர்களால் நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாகமும் உத்வேகமும் தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில், இரண்டு முக்கியமான தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை கொடுத்தது.
அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அரசியல் எனும் விதையை, எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்,
மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும், காந்தியார் சொன்னது போல் (நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்) என்பதற்கேற்ப சிறப்பாகவும் அறத்துடனும் செயல்படுவேன் என்ற உறுதியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விடை பெறுகிறேன். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.