Kathir News
Begin typing your search above and press return to search.

ஓட்டுக்காக மரத்தில் காரை மோதவிட்டு நாடகமாடிய 'மம்தா'.. நேரில் பார்த்தவர் சாட்சி.!

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நேற்று யாரோ மர்ம நபர்கள் தாக்கியதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியது. இதில் அவரது காலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் மருத்துவமனையில் கட்டு போடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியது.

ஓட்டுக்காக மரத்தில் காரை மோதவிட்டு நாடகமாடிய மம்தா.. நேரில் பார்த்தவர் சாட்சி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 March 2021 3:24 PM IST

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நேற்று யாரோ மர்ம நபர்கள் தாக்கியதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியது. இதில் அவரது காலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் மருத்துவமனையில் கட்டு போடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியது.





இந்த சம்பவத்தால் மேற்கு வங்க மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டில் உள்ள எதிர்ப்பு போராளிகள் உடனடியாக தைய தக்கா என்று குதித்தனர். ஆனால் தற்போது மம்தா பானர்ஜியின் குட்டு அம்பலம் வெளியாகியுள்ளது.

மம்தா பேனர்ஜி நேற்று நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக அவரே கூறியிருந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




இந்த சம்பவம் பாஜகவால் அரங்கேற்றப்பட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். மறுபக்கம் பாஜகவோ இது அரசியல் நாடகம் என்று வெளிப்படையாக சொல்லி வருகிறது.

இந்நிலையில், மம்தா பானர்ஜியை யாருமே தாக்கவில்லை என்று நேரில் பார்த்ததாக ஒருவர் கூறியதாக டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது மம்தா பயணம் செய்த கார் சாலையோரம் இருந்த தூண் ஒன்றில் மோதியதால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரை யாருமே தாக்கவில்லை என்று நேரில் பார்த்தவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.





அரசியல் லாபத்திற்காக தன்னை மர்ம நபர்கள் தாக்கிவிட்டனர் என்று ஒரு மாநில முதலமைச்சரே இப்படி கூறியிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News