Kathir News
Begin typing your search above and press return to search.

முக்கிய அமைச்சர் ராஜினாமா.. அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. வீழ்ச்சி ஆரம்பமா?

முக்கிய அமைச்சர் ராஜினாமா.. அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. வீழ்ச்சி ஆரம்பமா?

முக்கிய அமைச்சர் ராஜினாமா.. அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. வீழ்ச்சி ஆரம்பமா?
X

Saffron MomBy : Saffron Mom

  |  28 Nov 2020 12:30 PM IST

மேற்கு வங்காளத்தை ஆட்சி புரிந்துவரும் திரிணாமுல் காங்கிரஸிற்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அம்மாநிலத்தின் போக்குவரத்துறை அமைச்சர் சுவேந்து ஆதிகாரி, அம்மாநில அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

சுவேந்து ஆதிகாரி

ஆதிகாரியின் ராஜினாமா கடிதம் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் வங்காள ஆளுநர் இருவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இன்று மதியம் 1:05ற்கு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரு.ஆதிகாரியின் ராஜினாமா கடிதம் எனக்கும் வந்து சேர்ந்தது. இந்த விவகாரம் அரசியலமைப்பு ரீதியாகக் கையாளப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

வியாழக்கிழமையன்று சுவேந்து ஆதிகாரி ஹூக்ளி நதி பால ஆணையர்களின் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பிருந்து திரிணாமுல் கட்சியில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள தொடங்கினார். அப்போதிருந்து அமைச்சர் பதவியை அவர் நிர்வாகிக்கவில்லை.

சுவேந்து ஆதிகாரி, அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை சுசில் மற்றும் சகோதரர் திபெந்து இருவருமே மக்களவை எம்பிக்கள். திரிணாமுல் காங்கிரஸில், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் செல்வாக்கு வளர தொடங்கியதிலிருந்து, தான் ஓரங்கட்டப்படுவதாகக் கருதிய ஆதிகாரி, தற்பொழுது அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.

ஆதிகாரி குடும்பம், மம்தா பானர்ஜியின் முக்கியமான நந்திகிராம் போராட்டத்தின்போது தங்களது ஆதரவை வழங்கினர். தெற்கு வங்காளத்தின் மிட்னாபூர் பகுதிகளில் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு இவர்கள் முக்கிய காரணியாக கருதப்படுகிறார்கள்.

மிட்னாப்பூரின் இரண்டு மாவட்டங்களிலும், அண்டை மாவட்டங்களான புருலியா, பங்குரா, ஜாக்ராம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஆதிகாரிகள் குறிப்பாக சுவெந்து மிகவும் சக்தி வாய்ந்தவர்.

2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கிழக்கு மிட்னாபூரில் உள்ள தம்லுக் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் ஆதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு மாநில அமைச்சர்கள் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு போக்குவரத்து இலாகவிற்கு பொறுப்பேற்றார். இவரது சகோதரர் 2016 இடைத்தேர்தல்களிலும் 2019 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

வட வங்காளம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். 2016ஆம் சட்டமன்ற தேர்தல்களில் தான் பொறுப்பு வகித்த இடங்களில் எல்லாம் திரிணாமுல் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஆதிகாரி இருந்து வந்தார்.

திரிணாமுல் காங்கிரஸில்,குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவருக்கு வளர்ந்து வந்த செல்வாக்கும் புகழும் மம்தா பானர்ஜிக்கு சந்தேகப் போக்கினை வர வைத்தது. தனது மருமகனான அபிஷேக் பானர்ஜியை விட எங்கே ஆதிகாரிக்கு அதிக செல்வாக்கு கிடைத்து விடுமோ என்று கருத ஆரம்பித்தார்.

மேற்குவங்காளத்தில் சக்திவாய்ந்த தலைவர்களாக இருந்த ஆதிகாரிகள், தன்னுடைய அதிகாரத்தை மிஞ்சி தனக்கே போட்டியாளர்களாக வந்துவிடுவார்கள் என்று மம்தா பானர்ஜி கருதியதாகக் கூறப்படுகிறது.

கடந்த பல வாரங்களாக ஆதிகாரி கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.கவில் இணைவார் என்று வதந்திகள் பரவி வந்தது. இந்த மாத தொடக்கத்தில் பா.ஜ.கவிற்கு அவர் உதவி செய்ததாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. நந்திக்ராமிற்கு சமீபத்தில் சென்ற ஆதிகாரி, தனது கட்சியின் பெயரையோ அல்லது மம்தா பானர்ஜியையோ தனது உரையில் குறிப்பிடவில்லை.

நந்திகிராம் போராட்டத்தின் முக்கிய பங்காற்றியவர் ஆதிகாரி கருதப்படுகிறார். பன்னெடுங்காலமாக ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளின் ஆட்சியை கவிழ்க்க நந்திகிராம் போராட்டம் முக்கியமானதாக இருந்தது.

தற்போது இவரை சமாதானப்படுத்த மம்தா பானர்ஜி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை ஆதிகாரி இல்லத்திற்கு அனுப்பி இருந்தார். ஆனால் அவரை சந்திக்க ஆதிகாரி மறுத்துவிட்டார். கட்சியின் மூத்த தலைவர் சுகந்தா ராய் மூலம் அவரை சமாதானப்படுத்த ஒரு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தைகளும் முடிவில்லாமல் சென்று பலனளிக்கவில்லை.

அடுத்த வருடம் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆதிகாரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அரசியல் நிபுணர்கள் கணித்து வருகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News