Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டத்தை காற்றில் பறக்கவிடும் மம்தா அரசு.. ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநர்.?

சட்டத்தை காற்றில் பறக்கவிடும் மம்தா அரசு.. ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநர்.?

சட்டத்தை காற்றில் பறக்கவிடும் மம்தா அரசு.. ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநர்.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2020 8:34 PM GMT

பாஜக தேசிய தலைவர் நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்க அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கொல்கத்தா, டைமண்ட் ஹார்பர் பகுதியில் பொதுக்கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்தபோது பாஜக தேசிய தலைவர் நட்டாவின் கான்வாய் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கற்களை கொண்டு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினர்.

இதில் கார் கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது. இதனால் மத்திய பாதுகாப்பு படையினர் அவரை பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் என பலரும் தங்களின் கண்டனங்களை பதிவிட்டனர்.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் தலையீடு இந்த அரசியல் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களை ஆளுநர் சந்திதார். அப்போது அவர் கூறியதாவது: நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிஷ்டவசமானவை. இச்சம்பவம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்காக வெட்கப்படுகிறேன்.

ஆட்சியில் இது மிகவும் வேதனையான நாள். முதலமைச்சர் மம்தா பானர்ஜி அளித்த அறிக்கையை நான் மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறேன். அவர் அவருடைய வார்த்தைகளை திரும்பபெற வேண்டும். கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அரசியல் சித்தாந்தங்களுக்கும் அறிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. அதனை யாரும் மீறக்கூடாது. நாம் எங்கு செல்கிறோம்? நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? மேற்கு வங்க முதலமைச்சர் மேடம் தயவு செய்து நெருப்புடன் விளையாட வேண்டாம், என மேற்கு வங்க ஆளுநர் தங்கர் முன் எப்போதும் இல்லாத அளவு மம்தா அரசு மீது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலைப்பைப் பாதுகாப்பது எனது கடமை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியலமைப்பு வரம்புகள் மீறப்படுகின்றன.

மம்தா அரசியலமைப்பு பாதையில் இருந்து விலகியதால் எனது பொறுப்பு தொடங்குகிறது என்று கூறினார். மேலும், சட்டம் ஒழுங்கு பற்றி அவர் மத்திய உள்துறைக்கு அறிக்கையாக சமர்பித்துள்ளார். இதனையடுத்து மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற பேச்சுக்களும் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News