Kathir News
Begin typing your search above and press return to search.

பிரசாந்த் கிஷோரை நம்பி மோசம் போய் நிற்கும் மம்தா பேனர்ஜி.. கட்சியே காணமல் போகும் நிலை.!

பிரசாந்த் கிஷோரை நம்பி மோசம் போய் நிற்கும் மம்தா பேனர்ஜி.. கட்சியே காணமல் போகும் நிலை.!

பிரசாந்த் கிஷோரை நம்பி மோசம் போய் நிற்கும் மம்தா பேனர்ஜி.. கட்சியே காணமல் போகும் நிலை.!

Mohan RajBy : Mohan Raj

  |  19 Dec 2020 1:57 PM GMT

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் அமல்படுத்திய அரசியல் ஐடியாக்களால் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பேனர்ஜி'யின் கட்சி கிட்டதட்ட மண்ணை அள்ளி தலையில் போட்டுக்கொண்ட கதையாக கந்தலாகி நிற்கிறது.

கடந்த சில மாதங்களாக, தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து கட்சியை பலப்படுத்துவதாக மேற்கொண்ட அணைத்து நடவடிக்கைகளும் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால், தற்போது வரை மூன்று பேர் மட்டுமே வெளியேறியுள்ள நிலையில், பிரஷாந்த் கிஷோரின் ஆதிக்கம் தொடர்ந்தால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அணி அணியாக திரிணாமுல் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறும் சம்பவங்கள் அதிகரிக்கும் என அக்கட்சியினரே பேசிக் கொள்கிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சில்பத்ரா தத்தா இன்று கட்சியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் கட்சியிலிருந்து வெளியேறிய மூன்றாவது எம்.எல்.ஏ சில்பத்ரா தத்தா ஆவார். இதற்கு முன் மம்தா பானர்ஜியின் நம்பகமான உதவியாளர் சுவேந்து அதிகாரி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஒரு நாள் கழித்து பராக்பூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தத்தா ராஜினாமா செய்தார். இது மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் ஷியாமபிரசாத் முகர்ஜியும் கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க'வில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த தொடர் நிகழ்வுகளால் ஆடிப்போயுள்ள மம்தா பேனர்ஜி இன்னும் என்னவெல்லாம் நிகழ போகிறதோ என்ற அச்சத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த தத்தா, ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து வரும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க'வில் இணைய தயாராக உள்ள திரிணாமுல் கட்சித் தலைவர்களின் நீண்ட பட்டியலில் அவர் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும் தனது எம்.எல்.ஏ பதவி பற்றி அவர், "தற்போதைய சூழ்நிலையில் நான் கட்சியில் இருக்க தகுதியற்றவன் என்று நான் நினைக்கிறேன். ஆனால், நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். நான் ஏன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? மக்கள் வாக்குகளால் நான் வென்றேன். நான் ராஜினாமா முடிவெடுத்தால், அவர்கள் எங்கே போவார்கள்?" எனக கூறியதால் மம்தா தரப்பு ரொம்பவே அப்செட் என கூறப்படுகிறது.

தேர்தல் வெற்றிக்காகதான் பிரஷாந்த் கிஷோரை மம்தா பானர்ஜி வரவழைத்துள்ளார், ஆனால் அவரின் நடவடிக்கைகளால் தற்போது கட்சியே காணாமல் போகும் சூழல் நிலவும் நிலை ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News