Kathir News
Begin typing your search above and press return to search.

"பா.ஜ.க'வை எதிர்ப்பதை விட்டுவிட்டு என்னை எதிர்க்கின்றனர்" - காங்கிரஸை குறிப்பிட்டு தலையில் அடித்துகொள்ளும் மம்தா !

பா.ஜ.கவை எதிர்ப்பதை விட்டுவிட்டு என்னை எதிர்க்கின்றனர் - காங்கிரஸை குறிப்பிட்டு தலையில் அடித்துகொள்ளும் மம்தா !

Mohan RajBy : Mohan Raj

  |  31 Oct 2021 6:15 AM GMT

பா.ஜ.க'வுடன் மோதாமல் என்னுடன் மோதுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர் என மம்தா பேனர்ஜி ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நரேந்திர மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவராக ஆக்குவதே காங்கிரஸ் கட்சி தான்,பா.ஜ.க.வுக்கு விளம்பரம் தேடித் தரும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. காங்கிரசால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக மோதாமல் என்னுடனும், என் கட்சியை எதிர்த்தும் மோதினர், என்னவாயிற்று?" என கூறினார்.

சமீபத்தில் மோடியையும், பா.ஜ.க'வையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என பிரபல தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் கூறியது குறிப்பிடதக்கது.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News