மேகதாது அணை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம்.!
மேகதாதுவில் அணை கட்டப்படுவதை தொடர்ந்து வருகின்ற 18ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டப்படுவதை தொடர்ந்து வருகின்ற 18ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக எல்லையில் அமைந்துள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அணையை தடுப்பதற்காக தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநதிகள் டெல்லி சென்றுள்ளனர்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேசுவதற்கு டெல்லி செல்ல உள்ளார். இன்று மாலை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்திக்கும் நிலையில் ஸ்டாலின் வருகின்ற 18ம் தேதி டெல்லி செல்கிறார்.
டெல்லியில் வருகின்ற 19ம் தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். தற்போது மீண்டும் காவிரி பிரச்சனை தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.