Kathir News
Begin typing your search above and press return to search.

கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் - IT விசாரணையின் கீழ் காங்கிரஸ்?

கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் - IT விசாரணையின் கீழ் காங்கிரஸ்?

கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் - IT விசாரணையின் கீழ் காங்கிரஸ்?

Saffron MomBy : Saffron Mom

  |  24 Nov 2020 2:28 PM GMT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் ஏற்கனவே மத்திய புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. புதுடெல்லியில் உள்ள பழைய காங்கிரஸ் தலைமையகத்தில் உள்ள காஷியருக்கு 2016 முதல் 2019க்கு இடையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கிடைத்ததாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வெளியான இந்த செய்திகளில், இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிய IT துறை இப்பொழுது விசாரணையை தொடங்கியுள்ளது எனக் கூறுகிறது. இதன் 408 பக்க அறிக்கை டைம்ஸ் நவ் டைம்ஸ் சானலுக்குக் கிடைத்துள்ளது.

இவ்வறிக்கையின் படி, இப்படி வந்த பணம் தவணை முறையில் வந்தது என்று வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 13 முதல் அக்டோபர் 4 வரை காங்கிரஸ் தலைமையகத்துக்குக்கு 74.62 கோடி ரூபாய் வந்தது. ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2016 வரை மற்றொரு கட்டணமாக 26.5 கோடி ரூபாய் வந்தது.

மூன்றாவது தவணையாக ஏப்ரல் 2017 முதல் செப்டம்பர் 2019 வரை 5.22 கோடி ரூபாய்கள் வந்தது. 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னர் கணக்கிடப்படாத பணம் காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்ததாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி 5.4 கோடியும், அதற்கு மறுநாள் 3.75 கோடியும், ஏப்ரல் 20, 2019 அன்று 6.4 கோடியும், ஏப்ரல் 24 அன்று 5.45 கோடியும் பெற்றுள்ளது.

இதன் காரணமாக, இதற்கு விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியிடம் பா.ஜ.க கேட்டுள்ளது. பா.ஜ.க சமூக ஊடகப் பிரிவு தலைவர் அமித் மால்வியா, சோனியா காந்தி இந்த ஆவணங்களையும் IT விசாரணையும் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டார்.

2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சி அதைத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருந்தது. இப்பொழுது தங்களுடைய தலைமையகத்திற்கு வந்து சேர்ந்த இந்த பணத்தை பற்றி காங்கிரஸ் பதில் கூறியே ஆக வேண்டும். சோனியா காந்தி தான் காங்கிரஸ் தலைவர். அவர் மட்டுமே இப்பிரச்சினைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதைத் தான் இது குறிப்பிடுகிறது என்று வலியுறுத்தினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News