Kathir News
Begin typing your search above and press return to search.

நிலம் கொடுத்தால் லைஃப் டைம் செட்டில்மென்ட் என்கிற ரீதியில் பரந்தூர் மக்களை சமாதானப்படுத்தும் அமைச்சர் ஏ.வ.வேலு

நான்கு இடங்களை தேர்வு செய்து குறைவான குடியிருப்புகள் இருந்ததால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஏ.வ வேலு விளக்கம் அளித்துள்ளார்.

நிலம் கொடுத்தால் லைஃப் டைம் செட்டில்மென்ட் என்கிற ரீதியில் பரந்தூர் மக்களை சமாதானப்படுத்தும் அமைச்சர் ஏ.வ.வேலு

Mohan RajBy : Mohan Raj

  |  27 Aug 2022 5:25 AM GMT

நான்கு இடங்களை தேர்வு செய்து குறைவான குடியிருப்புகள் இருந்ததால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஏ.வ வேலு விளக்கம் அளித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் பணிக்கு 1500 வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தை மதிப்பை விட மூணரை மடங்கு அதிகம் இழப்பீடு தரப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு மக்களுக்கு சமாதானம் கூறியுள்ளார்.

பெரம்பூர் விமான நிலையத்தின் அவசியம் குறித்து அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பத்திரிகையாளரை சந்தித்தனர்.

நிலம் வழங்குவோரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும், இடம், வீடு கட்ட நிலம், பணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் திமுக எதிர்சியாக இருந்தபோது எட்டு வழி சாலை திட்டத்தில் சாலை போடக்கூடாது என சொன்னது இல்லை என எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை அழைத்து பேசுங்கள் என சொன்னதாகவும் விளக்கம் அளித்தார் ஏ.வ.வேலு.

ஆனால் தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது முழு வீச்சில் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்ததை மக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். விவசாயிகளுக்கான எதிர்காலத்தை பாழ்படுத்தும் திட்டம் என முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும்போது கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Source - Kathir News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News