கடல் தண்ணீரில் கால் நனையாமல் இருக்க மீனவர் இடுப்பு மீது ஏறி வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.!
மீன்வளத்துறைக்கு அமைச்சராக இருந்து கொண்டு கடலில் கால் வைப்பதற்கே தயக்கம் காட்டும் அமைச்சருக்கு மீனவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
By : Thangavelu
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆய்வு பணிக்காக வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் படகில் இருந்து இறங்கி தண்ணீரில் கால் வைக்க தயக்கம் காட்டியதால் மீனவர் இடுப்பு மீது ஏறி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை அடுத்த முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு நுழைவு வாயில் அடைப்பட்டு கிடக்கும் நிலையில், ஆய்வுப்பணிக்காக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பும்போது, படகில் இருந்து மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் கீழே இறங்கி வந்துவிட்டனர். ஆனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடல் தண்ணீரில் கால் வைக்க தயக்கம் காட்டினார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து மீனவர் ஒருவர் அமைச்சரை தூக்கி இடுப்பு மீது ஏற்றிக்கொண்டு கரையில் கொண்டு வந்து விட்டார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மீன்வளத்துறைக்கு அமைச்சராக இருந்து கொண்டு கடலில் கால் வைப்பதற்கே தயக்கம் காட்டும் அமைச்சருக்கு மீனவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.