"கம்யூனிஸ்ட் எம்.பி.யே பொறுத்துக்கொள்க இனிமேல் ஒருமையில் பேசாமல் இருக்க பார்க்கிறேன்"- கே.என்.நேரு!
திமுகவின் முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போதிலிருந்து திமுகவில் இருப்பவர் ஆவார்.

திமுகவின் முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போதிலிருந்து திமுகவில் இருப்பவர் ஆவார்.
இதனிடைய சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவனை மற்றும் விமான நிலையம் விரிவாக்க உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெறவில்லை என்று கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் கேட்கிறார் என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்.. வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான் அந்த ஆள் கிட்ட கேளு என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. திமுகவில் இருப்பவர்கள் யாருக்கும் மரியாதை அளிப்பதில்லை என்ற கருத்துக்களை நெட்டிசன்கள் வெளியிட்டனர்.
இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். நான் பேசியது தவறு அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறாமல் மனவருத்தப் படுகிறேன் என்று பதிவிட்டமைக்கு நெட்டிசன்கள் மீண்டும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
Source,Image Courtesy: Facebook