"ஆங் நாங்க பார்க்காத எதிர்ப்பா?" - அமைச்சர் கே.என்.நேரு !
சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
"ஆங் நாங்க பார்க்காத எதிர்ப்பா? எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் தி.மு.க" என ஜம்பமாக பேசியுள்ளார் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு.
பா.ஜ.க'வை இன்னொரு முறை, தயாநிதி மாறன் கொச்சைப்படுத்தினால், அவரைப்பற்றிய எல்லா விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும் என அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார், இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு, "தி.மு.க'வினர் எதிர்ப்பை சமாளிக்கும் வலுவோடு தான் இருப்பார்கள். தி.மு.க சந்திக்காத எதிர்ப்பா? எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் தி.மு.க. அண்ணாமலை புதிதாக பா.ஜ.க வின் தலைவராகி இருக்கிறார். அதனால், அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இது போன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.