அரசியலில் டி.டி.வி.தினகரன் காமெடி செய்கிறார்.. அமைச்சர் பாண்டியராஜன்.!
தமிழகத்தில் அரசியல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றி மாற்றி கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னும் தேர்தல் முடியும் முன்னர் மக்கள் எத்தனை காமெடிகளை பார்க்க போகிறார்களோ தெரியலை.
![அரசியலில் டி.டி.வி.தினகரன் காமெடி செய்கிறார்.. அமைச்சர் பாண்டியராஜன்.! அரசியலில் டி.டி.வி.தினகரன் காமெடி செய்கிறார்.. அமைச்சர் பாண்டியராஜன்.!](https://kathir.news/h-upload/2021/03/03/894193-mapa-panddi.webp)
தமிழகத்தில் அரசியல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றி மாற்றி கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னும் தேர்தல் முடியும் முன்னர் மக்கள் எத்தனை காமெடிகளை பார்க்க போகிறார்களோ தெரியலை.
இந்நிலையில், பரபரப்பான தேர்தல் அரசியல் களத்தில் காமெடி செய்ய ஆட்கள் வேண்டும், எனவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் 250 பேர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பேசியதாவது: ஆவடியில் இதுவரை 5 ஆயிரம் பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். பாலில் கலந்த சர்க்கரைபோன்று, மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் இனைந்தவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அனைவரும் ஒன்றினைந்து 3வது முறையாக அதிமுகவை அரியணையில் அமர்த்த வேண்டும் என்றார். மேலும், பரபரப்பான தேர்தல் அரசியல் களத்தில் காமெடி செய்ய ஆட்கள் வேண்டும். டிடிவி தினகரன் தற்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.