ராஜபாளையம் தொகுதியில் பொதுமக்களின் ஆதரவோடு வலம் வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் நகரத்தில் ஒவ்வொரு சமுதாய தலைவர்களையும் சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அதே போன்று ராஜபாளையம் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வரும் அமைச்சருக்கு பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர். அதே போன்று ராஜபாளையத்தில் இல்லத்துப்பிள்ளைமார் சமூக தலைவர்களை சந்தித்து வாக்கு சேகரித்து விட்டு, விவேகானந்தர் தெரு வழியாக சென்றபோது சாலையோரம் இருந்த டீ கடையில் பொதுமக்களுடன் சேர்ந்த தேனீர் அருந்தினார்.
அப்போது தேநீர் அருந்திக் கொண்டிருந்த பொதுமக்களிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதே போன்று அவர் தொகுதி முழுவதும் சாதாரண மக்களின் அன்பையும் பெற்று வருகிறார். தொகுதி முழுவதும் இவருக்கான அலை எழுகிறது. இதனால் திமுக டெபாசிட் வாங்குவதற்கே மூச்சு முட்டிவிடும் என்று ராஜபாளையம் மக்கள் பேசி வருகின்றனர்.