அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பின் தி.மு.க. காணாமல் போகும்.. அமைச்சர் செங்கோட்டையன்.!
அதிமுக தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னர் திமுக காணாமல் போய் விடும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னர் திமுக காணாமல் போய் விடும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அதிமுக, திமுக கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
முதலில் அதிமுக, பாமகவுடன் கூட்டணியை இறுதி செய்து அவர்களுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. அடுத்த கட்டமாக பாஜக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கிட்டத்தட்ட கூட்டணியை இறுதி செய்துள்ளது. இன்னும் ஒரு சில நாளில் அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: இன்னும் 4 நாட்கள் இருந்திருந்தால் பல்வேறு சலுகைகளை அறிவித்திருப்போம்.
அது மட்டுமின்ற அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிக்கை வந்தவுடன் திமுக காணாமலே போய்விடும்.
அதிமுக அரசு விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது அதிமுகதான். இவ்வாறு அமைச்சர் பேசினார்.