Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதி பெயரை சொன்னாலே எங்களுக்கு மகிழ்ச்சி பொங்குது ! தாறுமாறாக புகழும் எவ.வேலு!

உதயநிதி பெயரை சொன்னாலே இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

உதயநிதி பெயரை சொன்னாலே எங்களுக்கு மகிழ்ச்சி பொங்குது ! தாறுமாறாக புகழும் எவ.வேலு!

ThangaveluBy : Thangavelu

  |  27 Aug 2021 1:26 PM GMT

உதயநிதி பெயரை சொன்னாலே இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைகள் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் முன்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ராமசாமி, நாராயணசாமி, ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., ஸ்டாலின் வழியில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கு, உதயநிதி உலாவி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் என்று சொன்னாலே எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. திமுக திரையுலகில் பட்டுப்போய்விடுமோ என அஞ்சிய நிலையில், தற்போது ஒரு திராவிட நடிகர் கிடைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/114029/Minister-velu-praise-udhanidhi-stalin

Next Story
கதிர் தொகுப்பு
Trending News