கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் அமைச்சர் வேலுமணி.!
சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
By : Thangavelu
சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியது. அதில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியானது கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.
2ம் கட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அந்த வகையில் 2ம் கட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.