அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் - யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
By : Mohan Raj
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் அமைச்சர்களின் சிறப்பு கூட்டம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், 'ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மையும் தூய்மையும் மிகவும் முக்கியம், அதன் அடிப்படையில் அனைத்து மந்திரிகளும் பதவி ஏற்று மூன்று மாதங்களுக்குள் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தாரின் அசையும், அசையா சொத்துக்கள் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதேபோல் பி.சி.எஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் தன்னுடைய மற்றும் தங்கள் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை அறிவிக்கவேண்டும் பொதுமக்கள் அறியும் வகையில் அதை இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என கூறினார்.
மேலும், 'அரசு பணிகளில் தங்கள் குடும்பத்தினர் தலையிடாமல் இருப்பதை அனைத்து மந்திரிகளும் உறுதிப்படுத்த வேண்டும், அரசு திட்டங்களை குறிப்பிட்ட காலத்திலும் தரமாகவும் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு மந்திரிகள் வழிகாட்ட வேண்டும்' என அவர் உத்தரவிட்டுள்ளார்.