ஜனவரி 21ல் மு.க.அழகிரியின் புதிய கட்சி? அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
ஜனவரி 21ல் மு.க.அழகிரியின் புதிய கட்சி? அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
By : Kathir Webdesk
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவார் என்று சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்து போட்டியிடும் என்ற பேச்சுகளும் எழுந்தது.
இந்நிலையில், ஜனவரி 21ம் தேதி கலைஞர் தி.மு.க. என்ற பெயரில் மு.க.அழகிரி புதிய கட்சி துவங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஒரு சில நாட்களுக்கு முன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாகமே கட்சி துவங்க காரணம் என கூறப்படுகிறது.
ஒருவேளை கட்சி துவங்கும் பட்சத்தில் அழகிரி தனித்து போட்டியிடுவாரா அல்லது பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
தற்போது அழகிரி கட்சி தொடங்குவதால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஆட்சியை பறிக்கொடுக்கும் நிலை ஏற்படுமா என்ற பயத்தில் அவர் இருந்து வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.