கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மயங்கி விழுந்தார்.. மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிர்வாகிகள்.!
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மயங்கி விழுந்தார்.. மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிர்வாகிகள்.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக அதிமுக, பாஜக, ரஜினி மன்றம் மற்றும், திமுக அனைத்தும் செம பிஸியாக தேர்தல் வேலையில் ஈடுபட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடலூர், நாகை உள்ளிட்ட இடங்களை புரட்டி போட்ட புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று தமிழக முதலமைசசர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
அதே போன்று முதலமைச்சரை போன்று தன்னையும் காட்டி கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மழையால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு சென்றிருந்தார். அப்போது வெள்ள நீரில் இறங்கி நடந்து சென்றார். இது பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானது.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூரில் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றிருந்தார். அப்போது ஸ்டாலினுக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கம் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.