Kathir News
Begin typing your search above and press return to search.

ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பு. ஸ்டாலுனுக்கு ஓ.பி.எஸ் கடும் கண்டனம்!

பெண்கள் இலவசாமாக பயணம் செய்யும் பேருந்துகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, ஆண்களிடம் அதிகமாக பணம் வசூலிக்க படுகிறது என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆண்களிடம்  அதிக கட்டணம் வசூலிப்பு. ஸ்டாலுனுக்கு  ஓ.பி.எஸ் கடும்  கண்டனம்!

ParthasarathyBy : Parthasarathy

  |  3 Aug 2021 6:55 AM GMT

தமிழகத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற உடன் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் நகரத்தில் உள்ள சாதாரண கட்டணம் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். ஆனால் பெண்கள் இலவசாமாக பயணம் செய்யும் பேருந்துகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, ஆண்களிடம் அதிகமாக பணம் வசூலிக்க படுகிறது என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அதன் அடிபடையில் நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், சில பகுதிகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில் அந்த இழப்பை ஈடுசெய்ய, அந்த பேருந்தில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


இதற்கு முன்னர் குறைந்தபட்ச கட்டணமாக 5 ரூபாய் தான் இருந்தது, ஆனால் சட்டத்திற்கு புறம்பாக அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. இது குறித்து போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் கேட்டபோது 'தவறு சீர் செய்யப்படும்' என பதில் அளித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய யுக்திகளை அரசு கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்திற்கு, ஆட்சியாளர்களுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, மகளிருக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பை, ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source:Hindu Tamil

Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News