Kathir News
Begin typing your search above and press return to search.

'எப்படி பட்ஜெட்' என மக்கள் பட்ஜெட்'டை பற்றி செய்தியாளர்களை பார்த்து கேட்ட ஸ்டாலின் - விளம்பரமா ?

Mk stalin questions

எப்படி பட்ஜெட் என மக்கள் பட்ஜெட்டை பற்றி  செய்தியாளர்களை பார்த்து கேட்ட ஸ்டாலின் - விளம்பரமா ?

Mohan RajBy : Mohan Raj

  |  13 Aug 2021 9:30 AM GMT

மக்களுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை பார்த்து 'நிதி நிலை அறிக்கை எவ்வாறு இருக்கின்றது' என கேட்ட முதல்வர் ஸ்டாலின்.

இன்று தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் அமர்ந்த பிறகு ஸ்டாலின் தலைமையிலான அரசு முதல் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை சுற்றி வலம் வந்து நினைவிடத்தில் ரோஜா இதழ்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவிடத்தை வலம் வந்த முதலமைச்சர் அங்கிருந்த செய்தியாளர்களை நெருங்கி வந்து நிதிநிலை "நிதி நிலை அறிக்கை எவ்வாறு இருக்கின்றது" என கேட்டார். மக்களுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை பார்த்து எப்படி அறிக்கை என்றால் அவர்கள் என்ன கூறுவார்கள்? ஆட்சி மக்களுக்காகவா? அல்லது செய்தியாளர்களுக்காகவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News