ச.ம.க., ஜ.ஜே.கே. கட்சிகளுக்கு தலா 34 தொகுதிகள்.. வாரி வழங்கும் கமல்ஹாசன்.!
mnm alliance to smk and ijk seat allot

By : Thangavelu
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்த சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக ஜனநாய கட்சிக்கு தலா 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் வலுவனா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே 3வது அணியாக உருவெடுத்துள்ளோம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே அவரது தலைமையில் சமக மற்றும் ஐஜேகே கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. எனவே 3வது அணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என கமல்ஹாசன் கூறி வருகின்றார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளது. கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கிறோம் என்றும் சரத்குமார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மநீம தொடங்கியது. அதன்படி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர்கள் தலைமையில் அமைக்கும் கூட்டணியை தமிழக மக்கள் காமெடியாகத்தான் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
