112 நாட்களில் 2500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் - தட்டித்தூக்கிய மோடி சர்க்கார்!!
By : Mohan Raj
பி.எம் கேர்ஸ் எனப்படும் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் பெறப்பட்ட நிதியை கொண்டு மொத்தம் 2494 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை 112 நாட்களில் மோடி தலைமையிலான அரசு நிறுவியுள்ளது.
பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதம மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் கொரோனோ காலத்தில் பெறப்பட்ட நிதி என்னவாகின அந்த தொகை எதற்க்கெல்லாம் செலவு செய்யப்பட்டது என எதிர்கட்சிகள் அரசியல் சுய லாபத்திற்காக கேள்வி எழுப்பி வரும் நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நினைத்து கூட பார்க்க முடியாத சாதனையை மிக குறுகிய நாட்களில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
மொத்தம் 736 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துமனைக்கு ஒரு நாளைக்கு 3324 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மொத்தம் 2494 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் மிக குறுகிய காலகட்டமான 112 நாட்களில் துவங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாத இறுதிக்குள் கூடுதலாக 41 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக இதன் தலைவரும், வீட்டுவசதி மற்றுர் நகர்ப்புற விவகார செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா கூறியுள்ளார்.
பி.எம்.கேர்ஸ் பயன்படுத்தி கட்டப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துவங்கப்பட்டள்ளன என்றும், அதில் 9 மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு எடுத்துசெல்ல ஏதுவாக குறைவான தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.