காங்கிரஸ் கட்சியின் தோல்வி கோபத்தை கதிர் செய்திகள் மீது காண்பித்த எம்.பி.ஜோதிமணி.!
காங்கிரஸ் கட்சியின் தோல்வி கோபத்தை கதிர் செய்திகள் மீது காண்பித்த எம்.பி.ஜோதிமணி.!
By : Mohan Raj
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தனது வெற்றி மற்றும் தோல்வியை பாடமாக எடுத்துக்கொண்டு அதில் தவறுகளை கற்றுக்கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் மாறாக தன் தவறுகளுக்கு அதனை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் மீது கோபங்களை காண்பிக்க கூடாது.
ஊடகங்கள் மீது கோபப்படுவதும், ஊடகங்கள் கூறும் கருத்தினை எதிர்கொள்ளாமல் அதனை ப்ளாக் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் அரசியல்வாதிகளின் இயலாமையை காண்பிக்கிறது.
அதிலும் ஆளும் அரசின் மீது வன்மத்தை பரப்பி அதன் வெறுப்பு வாக்குகளை அறுவடை செய்து அதன் மூலம் பதவியில் திளைக்கும் கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி போன்ற வெறுப்பு அரசியலில் திளைத்தோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தன்னை நம்பி வாக்களித்த மக்களை இழிவுபடுத்துவதாகும்.
அந்த வகையில் செய்திகளை ஆராய்ந்து அதன் உண்மை தன்மையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் எங்களின் கதிர் செய்திகள் இணையதளத்தையும், ட்விட்டர் பதிவுகளையும் எம்.பி.ஜோதிமணி அவர்கள் இணையத்தில் ப்ளாக் செய்துள்ளார். இதிலிருந்தே அவரின் பொய்யான அரசியல் மற்றும் குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பு அனைத்தும் தெரிகிறது.
கதிர் இணையதளம் தற்போதைய தமிழக ஊடகங்களால் மறைக்கப்படும் செய்திகளையும், மாற்றப்படும் செய்திகளையும் தமிழக மக்களுக்கு சரியான கோணத்தில் சென்று சேர்க்கும் ஓர் நடுநிலையான ஊடகமாகும். நாங்கள் கூறும் கருத்துக்களை எதிர்க்க வழியின்றி, கருத்துக்களை ஏற்க நிலையின்றி, எதிர்வாதம் செய்ய இயலாமையால் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ளாக் செய்கிறார் என்றால். அந்த போலி அரசியல்வாதியின் உண்மை முகம் எங்கள் கதிர் செய்திகளால் கிழிக்கப்படுகிறது என்று அர்த்தம்.
உங்களை எதிர்பார்ப்புடன் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்காதீர் ஜோதிமணி எம்.பி அவர்களே, அப்படி அவமதிக்க நேர்ந்தால் இனி வாக்கு கேட்டு வீதிகளில் இறங்காதீர்! அதற்கான தகுதி உங்களிடம் உள்ளதா என மக்களே கூறுவர்.
காங்கிரஸ் கட்சியின் தோல்வியை கதிர் செய்திகள் மீது காட்டுவதா?