Kathir News
Begin typing your search above and press return to search.

எம்.பியா? அடியாளா? - தொடரும் தர்மபுரி எம்.பி.செந்தில்குமாரின் மிரட்டல்கள்!

எம்.பியா? அடியாளா? - தொடரும் தர்மபுரி எம்.பி.செந்தில்குமாரின் மிரட்டல்கள்!

எம்.பியா? அடியாளா? - தொடரும் தர்மபுரி எம்.பி.செந்தில்குமாரின் மிரட்டல்கள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2021 3:41 PM IST

தி.மு.கவிற்கு "அராஜக கட்சி" என்ற அடைமொழி மக்கள் மத்தியில் உண்டு அதனை நிரூபிக்கும் வகையில் ஆட்சியில் இல்லாமல் எதிர்கட்சியாக இருக்கும்போதே தி.மு.க'வினர் மிரட்டத்தொடங்கி விட்டதாக பலரும் கவலை கொள்கின்றனர். அந்த வகையில் தி.மு.க எம்.பி.செந்தில் குமார் பகிரங்கமாக தொடர்ந்து மிரட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.கவின் உண்மை முகத்தை வீடியோ போட்டு வெட்டவெளிச்சமாக்கி வந்த அரசியல் விமர்சகர் மாரிதாஸை தி.மு.க எம்.பி.செந்தில் குமார் மிரட்டியதாக தகவல்கள் கசிந்தன. அதனை மையப்படுத்தி, அரசியல் விமர்சகரான கிஷோர் கே.சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தருமபுரி செந்தில்குமார் எம்.பி., மாரிதாசரை மிரட்டுறீங்களாமே, அவரைவிட, கேவலமாக உங்கள் தலைமையை விமர்சித்து விட்டு வருகிறேன். அவராவது சூப்பர் ஸ்டார் முடிவால் சோர்வானார். எனக்கு அதெல்லாம் இல்லை. முடிந்ததை பாருங்கள்’ எனப்பதிவிட்டு இருந்தார்.

அப்பதிவிற்கு மிரட்டல் தொனியில் பதிலளித்துள்ளார் செந்தில் குமார் எம்.பி, இது குறித்து அவர் தனது ட்விட்டர், ‘’இவ்வளவு நாள் பொறுமை காத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாள்தான். சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையில், சிறப்பு முதல் மரியாதை உங்களுக்கு தான். அதில், எந்த சந்தேகமும் வேண்டாம். பெயர் ஏன் குறிப்பிட்டு சொல்லவில்லை என சிலர் பேர் சொல்லக்கூட தகுதியில்லாதவர்கள். அந்த தகுதியில்லாத லிஸ்டில் நீங்கள் தான் நம்பர் -1. ’’என மிரட்டி உள்ளார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பலரும், "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ரவுடி மாதிரி இப்படி மிரட்டுகிறார் என்றால் அவரின் கட்சியான தி.மு.க'வின் லட்சணம் எப்படி இருக்கும்?" என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வோம் என்றோ, நாட்டின் வளர்ச்சியை பெருக்குவோம் என்றோ கூற இயலாமல் இப்படி விமர்சிப்பவர்களை தூக்குவோம், பாத்துக்கிறோம் என மிரட்டுவதை மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கின்றனர்" என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News