முல்லை பெரியாறு - கேரள கம்யூனிச அரசுக்கு அதரவாக விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு !
By : Mohan Raj
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசோ சமயோசிதமாக நடந்து காரியத்தை சாதிக்க அதற்கு ஆதரவாக தமிழகத்தை ஆளும் விளம்பர முதல்வர் ஸ்டாலினோ கைப்பாவையாக மாறியுள்ளார், இதனால் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேலே உயர்த்தினால் கேரளாவின் 3 மாவட்டங்கள் மற்றும் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசும் கேரள அரசியல்வாதிகளும் தொடர்ந்து பொய்ப் பரப்புரை செய்து வருகிறார்கள். இதனை காரணமாக வைத்து கனமழை பெய்யும் போதெல்லாம் வலிமையான முல்லை பெரியாறு அணை உடைந்துவிடும் என கட்டுக்கதை கட்டிவிட்டு அதன் தொடர்ச்சியாக தண்ணீரை அதிகளவு கேரள அரசு திறந்துவிடுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் தங்கள் நிலங்களில் பயிர் செய்திருக்கும் விவசாயிகள் அதிக அளவு தண்ணீர் வரத்து காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டு நஷ்டமடைகிறார்கள். இந்ந விவகாரத்தில் கேரளத்தில் ஆளும் கம்யூனிச அரசோ தங்கள் மாநிலத்தை மட்டும் கருத்தில் கொண்டு சமயோசிதமாக நடந்துகொள்கிறது. ஆனால் விடியல் என விளம்பரங்களை செய்து வலம் வரும் முதல்வர் ஸ்டாலினோ இதனை கண்டும் காணாமல் கேரள அரசிற்கு மறைமுக ஆதரவாகவும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாகவும் நடந்து கொள்கிறார்.
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு ஒத்துழைத்த தி.மு.க அரசைக் கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். இத்தனைக்கும் இதுபற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏதும் கூறாமல் அமைதி காத்து வருவகிறார்.