முல்லை பெரியாறு அணை விவகாரம் : உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்! ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By : Thangavelu
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தின் தனது தீர்ப்பினில் கூறியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இடையூறு அளித்து வரும் கேரள அரசை முதலமைச்சரை தட்டிக்கேட்க வேண்டும். மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.
மேலும், முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும். புதிய அணை கட்டுவது தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter