Kathir News
Begin typing your search above and press return to search.

"முரசொலி ஒரு மஞ்சள் பத்திரிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

"முரசொலி ஒரு மஞ்சள் பத்திரிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

முரசொலி ஒரு மஞ்சள் பத்திரிக்கை - அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  11 Nov 2020 3:17 PM GMT

அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க தலைமையும் மற்றும் அதன் பத்திரிக்கையான முரசொலி'யையும் கடுமையாக தாக்கியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தை கொச்சை படுத்துவது கீழ்த்தனமான அரசியல் என்று கூறிய அவர், தி.மு.க-வின் அரசியலே கீழ்தரமானதுதான் என்றார். மருத்துவமனைகளில் இருந்தவர்கள், இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது தி.மு.க-வின் வழக்கம் எனவும், தி.மு.க-வின் பேச்சு பொதுமக்களுக்கு அருவெறுக்கத்தக்கதாக தான் இருக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ச்சியாக இவ்வாறு செயல்பட்டால் தி.மு.க-வை பொது மக்கள் முற்றிலும் புறக்கணிக்க நேரும்" என அவர் கூறினார்.

தொடர்ந்து முரசொலி பற்றி கருத்து தெரிவித்த பேசிய அவர், "முரசொலி ஒரு மஞ்சள் பத்திரிக்கை என்றும், மஞ்சள் பத்திரிக்கையில் தொடர்ச்சியாக ஆபாசமான வார்த்தை இருந்தால் அ.தி.மு.க தொண்டர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் எனவும், பத்திரிக்கை வெளியில் வராது என்றும் எச்சரித்தார். எம்.ஜி.ஆரின் கை கால் பிடித்து கெஞ்சியதன் காரணமாக ஊதியம் இல்லாமல் நடித்து கொடுத்தார் என்றும், தமிழனுக்கு உண்டான நன்றி உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், எழுதுவதை நிறுத்தாவிட்டால் நமது அம்மா பத்திரிக்கையில் உங்களின் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏற்றப்படும், மானம் கப்பல் ஏறிவிடும், எங்களுக்கும் பத்திரிக்கை உள்ளது என்றும், எங்களுக்கும் கவுன்டர் கொடுக்க தெரியும்" எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் பா.ஜ.க பற்றி பேசிய அவர், "அ.தி.மு.க, பா.ஜ.க விற்கு இடையே கருத்து வேறுபாடுகளும் இல்லை எவ்வித முரண்பாடுகளும் இல்லை என கூறிய அவர், சமூக வளைதளங்களில் யாரை வேண்டுமானாலும் go back என்று trend ஆக்கலாம், அந்த வகையில் தான் வாங்கிய பணத்திற்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார்" என்றும் அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News