முஸ்லீம் பெண்கள் அரசியல் கூட்டத்தில் பங்கேற்க கூடாது: அரவக்குறிச்சியில் ஜமாஅத் வெளியிட்ட நோட்டீஸ்.!
முஸ்லீம் பெண்கள் யாரும் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிகுட்பட்ட ஜமாஅத்துல் வெளியிட்டுள்ள நோட்டீஸ் அனைத்து பெண்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

முஸ்லீம் பெண்கள் யாரும் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிகுட்பட்ட ஜமாஅத்துல் வெளியிட்டுள்ள நோட்டீஸ் அனைத்து பெண்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது பற்றி பள்ளப்பட்டி நகர ஜமாஅத் உலமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நமது ஊரில் தொன்றுதொட்ட கலாச்சாரத்தையும், பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்போம்.
நமதூரின் சிறப்பான நல்லொழுக்கங்களில் பெண்களின் பர்தா, கோஷா பேணுதல் முக்கியமானதாகும்.
சமீப காலங்களில் வழமைக்கு மாறாக பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும் வீடு வீடாக கேன்வாசுக்கு செல்வதும் பெறும் வருத்தத்திற்கும் கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும். இது தொடர்பாக பொதுமக்கள் பலரும் தங்களது கவலையையும், கண்டனத்தையும் உலமாக்களிடமும், ஊர் முக்கியஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் ஊர் தழுவிய கூட்டங்களில் முடிவு செய்தது போல் ஷரிஅத் சுன்னத் மற்றும் நமதூரின் கண்ணியம் இறையான்மையைக்கருத்தில் கொண்டு, பெண்கள் தங்களின் கண்ணியம் காக்க அரசியல் பொதுக் கூட்டங்களுக்கோ, வீடு வீடாக கேன்வாசிற்கோ செல்வதை விழிப்புணர்வுடன் நலினமாகவும் செயல்படுமாறும் ஊர் பொதுமக்கள் சார்பாக பள்ளப்பட்டி நகர ஜமாஅத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு பள்ளப்பட்டி நகர ஜமாஅத்துல் உலமா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்படி ஒரு கொடுமை, இஸ்லாம் மார்க்கத்தில்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் ஆண், பெண் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.
ஆனால், முஸ்லீம் அமைப்பு பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைக்க முயற்சி செய்கிறது. இந்த நாட்டில் பெண்களும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று இந்த தேசத்திற்காக உழைக்கலாம்.
இது போன்ற அறிவிப்பு வருவதற்கு காரணம், பாஜக வேட்பாளர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு ஒரு கூட்டம் நடத்தினார். அதில் முஸ்லீம் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர், ஜமாத்தை வைத்து இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது போன்ற போலி மதவாதிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.