நாகையில் வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.!
nagai dist collector visit vote counting room

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் தனது பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் நாகை வடகுடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எண்ணப்படுகிறது.இந்த வாக்கு எண்ணும் மையத்தினை நாகை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பிரவின் பி.நாயர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா, எந்த அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பது, எந்த அறைகளில் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வது மற்றும் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி மற்றும் வருவாய்த்துறை அதிகாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.