Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் சட்டையை கிழித்துக்கொண்ட கழக நிர்வாகிகள் !

நாமக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் சட்டையை கிழித்துக்கொண்ட கழக நிர்வாகிகள்    !
X

ThangaveluBy : Thangavelu

  |  20 Nov 2021 4:16 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக ஆட்சியை பிடித்த பின்னர் அக்கட்சிக்குள் பல மாவட்டங்களில் அதிகார போட்டிகள் நிலவி வருகிறது. அதே போன்று நாமக்கல் மாவட்டத்திலும் ஒரு காட்சி அரங்கேறியுள்ளது.

அதாவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில், திமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோட்டில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வாங்கப்பட்டது. முன்னாள் எம்.பி. தரப்பிற்கும், தற்போதைய நகர்மன்ற பொருப்பாளராக இருக்கக்கூடிய தாண்டன் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

இதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது பற்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் எப்போதும் அதிகாரத்திற்கு அடித்துக்கொள்வது இதன் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News