நீங்கள் மோடியின் தேசமா? பாஸ்போர்ட்டை பார்த்து அயல்நாட்டினர் கேட்கும் அளவிற்கு மோடி நம் மதிப்பை உயர்ந்தியுள்ளார் ! - பெருமைபட்ட அமித்ஷா!
By : Mohan Raj
"இப்போது எந்த வெளிநாட்டு அதிகாரியும் இந்தியப் பாஸ்போர்ட்டைப் பார்த்தால் சற்று புன்னகைத்த முகத்துடன், நீங்கள் மோடி தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்களா என்று வியப்புடன் கேட்கிறார்கள்" என உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமைபட கூறியுள்ளார்.
கோவா'வின் பானாஜி நகரில் பாஜகவின் காரியகர்த்தா சம்மேளன நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியாவது, "2019'ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காவிட்டால், ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது, ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவு சட்டத்தையும் ரத்து செய்திருக்க முடியாது. கோவாவிலும் 2022'ம் ஆண்டு முழு பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தியவைப் பார்க்கும் பார்வை உலகளவில் இன்று மாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் கப்பல் மாலுமிகள் வந்து செல்லும்பகுதி கோவா என்பது உங்களுக்குத் தெரியும். இந்த மாலுமிகளிடம் சென்று கேளுங்கள், இதற்கு முன் இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் இந்திய பாஸ்போர்ட்டை காண்பித்தால், அதைப் பார்ப்பவர்கள் எவ்வாறு எதிர் வினையாற்றினார்கள்.
இப்போது எந்த வெளிநாட்டு அதிகாரியும் இந்தியப் பாஸ்போர்ட்டைப் பார்த்தால் சற்று புன்னகைத்த முகத்துடன், நீங்கள் மோடி தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்களா என்றுவியப்புடன் கேட்கிறார்கள்.
பிரதமர் மோடி இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளார். பா.ஜ.க தேர்தலில் பெரும்பான்மை பெற்றதால்தான் இது சாத்தியமானது" என பெருமைபொங்க கூறினார்.