மனித நேயத்துடன் மருந்து பொருள்களை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பி வைத்த பிரதமர் மோடி !
By : Mohan Raj
மனிதநேய அடிப்படையில் மருத்துவ பொருள்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது இந்தியா.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைபற்றி நடத்தி வருகின்றனர். அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகள் உதவி செய்வதையும் பயணம் மேற்கொள்வதையும் நிறுத்தியுள்ளனர். தாலிபான் அரசை உலகநாடுகள் அங்கீகரிக்காத காரணத்தினால் பல நாடுகள் உணவு மற்றும் மருந்து பொருள்கள் உதவி செய்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து மக்கள் பாதுகாப்பிற்காக வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஆப்கன் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் வழங்க முன்வந்துள்ளது. முதற்கட்டமாக மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு விமானம் வாயிலாக இந்தியா நேற்று அனுப்பி வைத்தது. இவை ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலிபான் தீவிரவாதிகள் பல கொடூர செயல்கள் செய்தாலும் ஆப்கன் மக்களை மனதில் வைத்து மனிதநேயத்துடன் இந்தியா மருந்து பொருள்கள் அனுப்பியுள்ளது பல உலக நாடுகள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.