தலித் பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. பதற்றத்தில் மு.க.ஸ்டாலின்.!
தலித் பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. பதற்றத்தில் மு.க.ஸ்டாலின்.!
By : Kathir Webdesk
திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போலியாக நடத்தி வருகிறார். இதற்காக பல மாவட்டங்களுக்கு செல்லும் முன்னரே ஒரு துண்டு சீட்டில் பேசுவதற்கு எழுதி வைத்துக்கொள்வார். அதே போன்று கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் கூட்டத்திற்கு திமுகவினர் ஏற்பாடு செய்தனர். அந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது திமுகவை சாராத பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினிடம் சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
இதனால் நடுங்கிப்போன ஸ்டாலின், தான் எழுதி வைத்திருந்த துண்டு சீட்டில் இல்லாதவற்றை எல்லாம் இந்த பெண் கேள்வி கேட்கிறாரே, அவர் அமைச்சர் வேலுமணி அனுப்பின ஆள்தானே என கூறினார். இதனையடுத்து அவரது கட்சியை சேர்ந்த குண்டர்களை வைத்து அடிக்க உத்தரவிட்டார். இதனால் திமுக குண்டர்கள் பூங்கொடியை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமின்றி, மிக கொடுரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பெண்ணுக்கு காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தது. ஒரு பெண் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வது தலைவரின் கடமை ஆகும். அதனை விட்டுவிட்டு இப்படி ஆட்களை விட்டு அடிப்பது வெட்கக்கேடானது என பல்வேறு தரப்பு மக்களும் கண்டனங்களை தெரிவித்ததை அனைவரும் அறிந்தோம்.
இந்நிலையில், அப்பெண் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் என்றும், விசிகவில் மாவட்ட மகளிரணி பொறுப்பில் உள்ளார் என்பது தெரியவந்தது.
இதனிடையே தலித் சமுதாய பெண்ணை தாக்கிய ஸ்டாலின் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி, கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ அனுப்பி உள்ளது. தற்போது இந்த சம்பவத்தால் ஸ்டாலின் மிகவும் கலக்கத்தில் உள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.