தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகிறது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது, அதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். மேலும், பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.